Friday 9 September 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (17) - மெளனம் கலைகிறது (2)


தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் (2015) கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற எழுத்தாளர்விழாவில், இலக்கியக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் சில புத்தகங்கள் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சங்கம் ஏற்றுக்கொண்டதன்படி, நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறுபுத்தகங்கள். என்னுடைய சிறுகதைத்தொகுப்பு அதில் இரண்டாவதாக இருந்தது. நிகழ்ச்சி நடந்தபோது எல்லாம் தலைகீழாக்கப்பட்டு, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு கடைசியாக வந்தது.

(தலைமை:   திரு  நாகை சுகுமாரன்

பேராசிரியர் .சிகந்தராஜாவின்   நூல்கள் 
திருஜே.கேஜெயக்குமாரன்
                                            
திருகே.எஸ்.சுதாகரனின் சிறுகதைத்தொகுதி 
திருகுமாரதாசன்

செபாஸ்கரனின் முடிவுறாத முகாரி (கவிதை) –
திருமதி சாந்தினி புவநேந்திரராஜா

டொக்டர் நடேசனின் மலேசியன் ஏர்லைன் சிறுகதை)  - திருநவரத்தினம் இளங்கோ

கலைவளன் சிசுநாகேந்திரனின் மொழி மாற்று அகராதி திருசிவசுதன் (கேசி தமிழ்மன்றம்)

நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்கள் 
திருஎஸ்.சிவசம்பு )

என்னுடைய சிறுகதைத்தொகுப்பின் பேச்சாளருக்கு ஞாபகமூட்டும் வகையில், விழா நடைபெறுவதற்கு முதல்நாள் தொலைபேசியில் உரையாடியபோது, நீங்கள் இரண்டாவதாகப் பேச வேண்டி வரும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர், ’இல்லையே! திரு. முருகபூபதி அவர்கள் மின்னஞ்சல் செய்திருக்கின்றார். அதில் உங்கள் புத்தகம் கடைசியாகத்தான் உள்ளது. நான் கடைசியாகத்தான் பேச வேண்டி வரும்” என்றார்.

“இல்லை. இல்லை. நிகழ்ச்சி நிரல் எல்லாம் பிறின்ற் பண்ணியாகிவிட்டது. நான் தான் இப்பொழுது ஒஃபிஸ் வேர்க்கில் (office work) பிறின்ற் செய்து கொண்டு வந்துள்ளேன். மின்னஞ்சலில் ஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் பெயர் இரண்டாவதாகத்தான் உள்ளது” என்றேன் நான்.

சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் எல்லாருக்கும் தெரியாமல் இந்த விளையாட்டு நடந்திருக்கின்றது. அவர் அந்த இலக்கியக் கருத்தரங்கு தொடர்பாக தான் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்து, குறிப்பிட்ட பேச்சாளர்களுக்கும் தலைமை தாங்கியவருக்கும் மின்னஞ்சல் செய்திருக்கின்றார். ஏற்கனவே சங்கம் நிகழ்ச்சி நிரல் தயாரித்தபோது இந்த மாற்றத்தை செய்ய விரும்பி இருந்தால் எல்லாரும் அதற்கு உடன்பட்டிருப்பார்கள். அப்படி இருக்கும்போது, அந்த மாற்றத்தை இரகசியமாகச் செய்திருக்க வேண்டிய தேவை என்ன?

விழா நடந்த பொழுது, அதற்குத் தலைமை தாங்கியவர்--- திரு  நாகை சுகுமாரன்--- திரு. முருகபூபதி அவர்கள் மின்னஞ்சல் செய்ததன்படியே நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அறிவிப்பாளர் விழி பிதுங்கிய நிலையில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தார். நான் எனக்கு அருகில் இருந்த முருகபூபதி அவர்களிடன் “நிகழ்ச்சி நிரல் எல்லாம் மாறி மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது” என்றேன். அதற்கு அவர் “அதுதானே! என்ன நடக்குது இங்கே? பயப்படாதீர்கள்! அடுத்ததாக உங்கள் புத்தகம் வரும்” என்றார்.
ஒன்றுமே தெரியாதது போல தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி விடுகின்றார் இவர்.

“சங்கத்தின் தலைவர்---ஜெயராமசர்மா அவர்கள்—முன் வரிசையில் இருக்கின்றார். ஒன்றுமே செய்ய முடியாது. நடப்பது நடக்கட்டும்” என அறிவிப்பாளர் சொல்லிவிட்டார்.

எனது புத்தகம் பற்றிய விமர்சனம் கடைசியாகத்தான் வந்தது.

கடைசியாக வருவதில் தப்பொன்றும் கிடையாது. கடைசியாக யாருடைய ஒன்றோ வரத்தானே வேண்டும். விடயம் அதுவல்ல. நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்டு, பார்வையாளர்களுக்கும் பங்காளர்களுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் இப்படிச் செய்வது அழகல்ல.

அந்த மாற்றத்தைச் செய்திருக்க வேண்டிய தேவை என்ன?

எனக்கு இரண்டு காரணங்கள் தென்படுகின்றன.

ஒன்று : உயர்திரு வெங்கட் சாமிநாதனின் முன்னுரையுடன் வந்த என்னுடைய புத்தகம் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’

இரண்டு : திரு குமாரதாசனின் பேச்சாற்றல்.

குமாரதாசன் அவர்கள் தனது புத்தக விமர்சன உரையை முடிக்கும்போது இப்படிக் கூறினார்.

“முருகபூபதி அவர்களுக்கு அப்படி என்னதான் என்னுடன் கோபமோ தெரியவில்லை. என்னைக் கடைசியாகப் போட்டுவிட்டார்”

அவர் நகைச்சுவையாகத்தான் கூறினார். இருப்பினும் நாசூக்காக ஒன்றைச் சொல்லிவிட்டுப் போயிருக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் பேச்சாற்றலே தவிர வேறொன்றுமில்லை. உங்கள் பேச்சு வன்மையால் மற்றப் புத்தகங்கள் பற்றிய பார்வை அடிபட்டுப் போய்விடும்.

நிகழ்ச்சிநிரலை வடிவாகப் பாருங்கள். அவருக்கு வேண்டிய ஒருவரின் புத்தகம் பற்றிய பார்வை பின்னாலே வருகின்றது அல்லவா?

இப்போது அந்தச் சங்கம் உறுப்பினர்கள் அற்று ஊஞ்சலாடுகின்றது. ஊசலாடுகின்றது.

தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.




No comments:

Post a Comment