Sunday 25 September 2016

ஆபத்து


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

வகுப்பறைக்குள் நுழைந்ததும் பெரும் ஆச்சரியம். 

பார்ப்பதற்கு பெரும்பாலான மாணவர்கள் ஒரே மாதிரியாகவே இருந்தார்கள். பல்லினக் கலாசார நாடுகளில், வருங்காலங்களில் இது பெரும் சவாலாகப் போகிறது.

அருகே இருக்கும் சீனப்பெண், ஒரு முறை விரிவுரையைக் கேட்டாலோ, புத்தகத்தைப் படித்தாலோ இலகுவாகக் கிரகித்துக் கொள்கின்றாள். அவள்தான் வகுப்பில் முதன்மையானவள்.

இது எப்படி? அவள் சொல்கின்றாள்:


என்னுடைய பரம்பரையில் அறிவாளிகளே கிடையாது. நான் ரெஸ்ற் ரியூப் பெண்.

Tuesday 20 September 2016

His Royal Highness, The Tamil Tiger

by

Kathir Bala Sundaram

Chapter 15
Black Luck

Haran Kandiah felt worse than normal as he coughed violently on the morning of February 6. His eyes were bloodshot, and his cheeks looked sunken from lack of nourishment. He couldn’t even bring himself to drink the coffee his lovely wife set in front of him.
The deadline to deliver the money to save his sister was just a couple days away. As of yet, the maximum offer for the house and shop was just shy of three million rupees. It was nowhere near enough.
Standing shakily to his feet, he began the walk to his sister’s house in another effort to find a buyer willing to pay more. He passed a temple where he paused to pray, pressing his palms together in front of his chest. He prayed despite the fact that he had given up hope. His failure haunted him and he couldn’t shake the image of his accusing sister looking at him with sad eyes.

Tuesday 13 September 2016

பொற்காலம் - கதிர் பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

6. முடக்கு வாதம்


யூனியன் கல்லூரி வளாகக் காணிக்கு முடக்கு வாதநோய் பிடித்திருக்கிறது. வைத்தியத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அதன் வளாகம் அமைந்த காணி உள்ளது. அந்த வியாதிக்குப் புதிதாக எனது காலத்தில் இணைத்த திறந்தவெளி அரங்கப்பகுதி அமைந்த காணி அடங்காது. அது சுமார் எட்டுப் பரப்பு இருக்கவேண்டும். இப்பொழுது திறந்தவெளியரங்கு அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமான பனையடைப்பாக விருந்தது. அதனை வளாகத்தோடு இணைக்க ஒரு சந்தர்ப்பம் தேடிவந்தது. தெல்லிப்பழைக் கிராமச் சங்கம், சந்தியில் ஒரு நூல் நியைம் அமைக்க, யூனியன் கல்லூரிக்கு அங்கு இருந்த விடுதிக் காணியில் கிழக்கு வளத்தில் ஒரு காணித்துண்டு தரும்படி கேட்டார்கள். குறித்த பனையடைப்பை, உரிமையாளரிடம் விலைக்கு வாங்கி எமது கல்லூரிக்குத் தந்தால், தருவதாக ஒப்புதல் கொடுத்தேன். அவர்களே காணி கைமாறுவதைத் துரிதப்படுத்தினார்கள். பனையடைப்பு யூனியன் கல்லூரி வளாகத்துடன் இணைக்கப்பட்டது. பனைகளை வேரோடு சாய்த்துத் திறந்தவெளியரங்கு அமைத்த விறுவிறுப்பான மீதிக் கதை பின்னர் சொல்லப்படும்.

Sunday 11 September 2016

’அக்கினிக்குஞ்சு’ இணையத்தள ஆசிரியர் யாழ்.பாஸ்கரிடம் நான் முன் வைக்கும் சில கேள்விகள்


 









1.   நீங்கள் வெளியிட்ட ‘அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை பற்றி – உங்கள் நெஞ்சில் வரும் அந்தக்காலத்து நினைவுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

2.   ’அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை நின்று போனதற்கான காரணங்கள் எவை எனச் சொல்வீர்கள்.


3.   ஒரு எழுத்தாளர் சஞ்சிகை நடத்துவதற்கு (இணையம் ஆயினும் சரி) தமது நேரத்தை ஒதுக்குவதனால், அவர் தனது எழுதும் நிலையிலிருந்து விடுபட்டுப் போகின்றார் என்று சொல்வது பற்றி…

Friday 9 September 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (17) - மெளனம் கலைகிறது (2)


தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் (2015) கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற எழுத்தாளர்விழாவில், இலக்கியக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் சில புத்தகங்கள் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சங்கம் ஏற்றுக்கொண்டதன்படி, நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறுபுத்தகங்கள். என்னுடைய சிறுகதைத்தொகுப்பு அதில் இரண்டாவதாக இருந்தது. நிகழ்ச்சி நடந்தபோது எல்லாம் தலைகீழாக்கப்பட்டு, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு கடைசியாக வந்தது.

Wednesday 7 September 2016

ஒரு மனிதன் பல கதைகள் - சிறுகதை



மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.

Saturday 3 September 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி 
நினைவுகள் பதிவுகள்

 5. ஆட்டுத் தீர்த்தமும் கிணற்று நீரும்


     பௌதிகச் சூழல் சம்பந்தமான மூன்றாவது பிரச்சினை நாலுகால் விலங்குகளின் பிரச்சினையாக இருந்தது. வளாகத்தின் வடபகுதி வேலியூடாக அயலட்டையில் உள்ள ஆடுகள் யாவும் இரவில் வந்துவிடும். ஒரு இருபத்தைந்து முப்பது பார்க்கலாம். அவை இரவில் உறங்குமிடம் விஞ்ஞான ஆய்வுகூட விறாந்தை, அதன் வடக்கே உள்ள உயர்தர வகுப்பு வகுப்பறைகள். அவை கொட்டிய கறுப்புப் பிளுக்கைகள் விறாந்தை நீளத்துக்கும் வகுப்பறைகளிலும் பரந்து காணப்படும். அந்தப் பக்கம் கால் வைத்தால் ஆட்டுத் தீர்த்த வாசனை ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்றது. சில குளப்படியான ஆடுகள் ஆசிரியர் மேசையிலேயே ஏறித் துயின்றது போதாதென்று, தீர்த்தம் தெளித்திருக்கும். மீன் கூடைக்காரிக்கு மீன்வாசம் என்ன தோசமா? அவர்களும் பழக்க தோசத்திற்கு ஆளாகியிந்தார்களோ? தோட்ட வேலைக்குப் பொறுப்பான திரு. கதிரனின் முதல் வேலை அவற்றைச் சுத்தம் செய்வதே. வகுப்புகளுக்கு மாணவர்கள் வரமுன்னர் செய்து முடிக்க வேண்டும். திரு. கதிரனைச் சிலவேளைகளில் காலையில் பாடசாலை அடைந்ததும் காண முடிவதில்லை. சற்று பிந்தி வந்ததை விசாரித்தால்,

Thursday 1 September 2016

புறமோஷன்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

கோகுலனும் தீபனும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக ஒரே பாடசாலையில் பிறைமரியில் சேர்ந்தார்கள். 

சேர்ந்த சிறிது காலத்தில் கோகுலன் உட்பட நான்கு மாணவர்கள் வகுப்பேற்றப்பட்டார்கள்.

தீபனின் அம்மா, தனது மகனையும் வகுப்பேற்றும்படி ஆசிரியரிடம் கெஞ்சினார்.

“நன்றாகப் படிக்கக் கூடியவர்களை மாத்திரம் வகுப்பேற்றினோம்”  ஆசிரியர் மறுத்துவிட்டார்.

இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள். தயவு செய்து தீபனையும் வகுப்பேற்றுங்கள், இல்லாவிட்டால் கோகுலனை வகுப்பு இறக்கி விடுங்கள்

ஆசிரியர் திகைத்துப் போனார்.

கங்காருப் பாய்ச்சல்கள் (16)

மெளனம் கலைகிறது (1)

சிறுவயதில் பாடசாலை செல்லும் காலங்களில் பெரும்பாலும் நடந்தே செல்வோம். சில பொழுதுகளில் வேலிகளில் இருக்கும் ஓணான்கள் தரை இறங்கி வேகமாக எம்மைக் கடிக்க வருவதுண்டு. பின்னர் என்ன நினைத்தோ வந்த வேகத்தில், திரும்பப் போய் வேலிகளில் ஏறிக்கொள்ளும். பின்னர் மீண்டும் பாடசாலை முடித்து திரும்ப வீடு வரும்போது மீண்டும் இதே சேஷ்டையை இந்த ஓணான்கள் செய்யும். கடவுள் ஓணான்களுக்குக் கொடுத்த வரம் இது. இதேபோல சில ‘ஓணான் மனிதர்களை’ நான் இங்கே சந்தித்திருக்கின்றேன்.