Thursday 25 August 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

 
by
Kathir Bala Sundaram

Chapter 14

The Love Trap

Lieutenant Earless couldn’t shake the image of that beautiful girl from his mind. Since that day when he had accompanied the Minister of Political Affairs to Vembady Girls’ College, the picture of the tall, thin girl dominated his mind. He could still see Sendhoory’s two long plaits dancing around her shoulders and breasts—an image that had nearly driven him mad with lust at the very first sight of her. From that moment on, the beautiful angel had captivated his eyes and imagination.
In the following weeks, he even went so far as to pen some verses of poetry about her.
All the stars in the sky shine with thy face
Bouncing braids make my heart race.
My dearest angel, I would kiss you all the night
Come down, my love, and make my heart right.

A few of his subordinates were aware of his madness, but being that the Lieutenant was a well known womanizer, they passed it off as a flight of fancy that would be swallowed up like footprints in a swamp.

Saturday 20 August 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

 

யூனியன் கல்லூரி - நினைவுகள் பதிவுகள்

4. புதிய மதிலின் காதல் ஓவியம்
                 
                       கற்றல்-கற்பித்தல், இணைப்பாடவிதானச் செயற் பாடுகளுக்கு இசைவில்லாத கல்லூரியின் பௌதிகவளச் சூழல், பூதாகாரமாகக் காட்சியளித்தது. அது மாணவர்-ஆசிரியர்களின் செயற்திறனைப் பாதிக்கக் கூடியதாக விருந்தது. அவ்வகையான ஜலம்கட்டிய புண்போன்ற பிரச்சினைகளுள் ஒன்றுதான் ‘இரண்டாவது விளையாட்டு மைதானம்’ சம்பந்தப்பட்டது.

       ஆண்களுக்கான மலசலகூடம் கல்லூரிப் பிரதான வளாகத்துக்கு வெளியே, மேற்கில் உள்ள ஒழுங்கையைக் கடந்து அமைந்த ‘இரண்டாவது விளையாட்டு மைதான’ ஓரத்தில் இருந்தது. அது பெருமனத்தோடு பொது ஜனங்களையும் தாராளமாக வரவேற்றது. அதற்குச் செல்வதற்கு ஒரு சிறிய படலை. அது போதாதென்று அருகே அமைந்த பெரிய இரட்டைக் ‘கேற்’ வஞ்சகமில்லாமல் எப்பொழுதும் ஓவென்று திறந்தபடியிருந்தது. அந்தச் சூழல் பாடசாலைக்குத் தலையிடியான ஒழுக்கப் பிரச்சினைகளைக் கொடுத்தது. அதற்கு உடனடியாக விடை காணவேண்டியிருந்தது.

Wednesday 17 August 2016

படைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்கியும் அல்ல.


திரு. லெ.முருகபூபதியுடன்  நேர்காணல் 

பகுதி 2


13.         இலங்கையில்    சர்வதேச  எழுத்தாளர்  மாநாட்டை   முன்னின்று நடத்தியவர்களில்   நீங்களும்  ஒருவர்.   அப்பொழுது  இலங்கையில்  அந்த மாநாடு    நடைபெறுவதையிட்டு  பலரும்  கருத்து  வேறுபாடுகள் கொண்டிருந்தார்கள்.    இப்பொழுது  யோசித்துப்  பார்க்கும்போதுஅப்பொழுது இருந்த  நிலைப்பாட்டில்தான்  இப்பொழுதும்  இருக்கின்றீர்களா...? அல்லது மாறுபட்டு  உள்ளீர்களா...?

Saturday 13 August 2016

படைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்கியும் அல்ல.


திரு. லெ.முருகபூபதியுடன்  நேர்காணல்

பகுதி 1

01.         'அரசியலைத் தெரிந்து  வைத்துக் கொண்டு  எழுதும்  எழுத்தாளர்களில் நீங்கள்  குறிப்பிடத் தகுந்தவர் -   எனது   இந்தக் கருத்துப்  பற்றி  நீங்கள்  என்ன  சொல்ல  விரும்புகின்றீர்கள் ?

முருகபூபதி :  மனிதர்களிடத்தில்  நாகரீகம்    பரவத்தொடங்கிய  காலம் முதலே  அரசியலும்  அறிமுகமாகிவிட்டது.  அரசியல்தான்  தேசங்களின் தலைவிதி.   மக்கள்  தேர்தலில்  யாருக்கோ   வாக்களிக்கிறார்கள். யாரையாவது  ஆதரிக்கின்றார்கள்.   அத்துடன்,   அரசியல்  கருத்தியல் சார்ந்தது.    எனவே  எவருமே    தனக்கும்  அரசியலுக்கும்  சம்பந்தம்  இல்லை எனச்சொல்லமுடியாது.   நான்  பத்திரிகையாளனாக  உருவாகி படைப்பாளியாக   மாறியவன்.   பத்திரிகையாளனுக்கும்  படைப்பாளிக்கும்  அரசியல்  தெரிந்திருக்கவேண்டும்.    அரசியலைத் தெரிந்துவைத்துக்கொண்டு எழுதும்  எழுத்தாளர்கள்தான்  எம்மத்தியில்  வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கின்றார்கள்.   கம்பருக்கும்  வள்ளுவருக்கும்  இளங்கோவுக்கும் பாரதிக்கும்   அரசியல்  தெரியும்.  எனவே  நான்  விதிவிலக்கல்ல.

Wednesday 10 August 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION

 

by
Kathir Bala Sundaram
Chapter 13

Betting on a Dead Horse

By January 30th, the deadline for paying the fine imposed upon Mrs. Vasantha Velautham was fast approaching. Her brother’s efforts to collect the money had ended in failure. Malar, Haran’s wife, found herself constantly cheering her husband up for she feared that if she did not, he would be swallowed up in fear and dread—and just give up. She would often remind him of a German proverb, “Fear makes the wolf bigger than he really is.”
This day found Haran Kandiah at home in his kitchen helping his wife to cook dinner. He diligently scrapped coconut to prepare a sothy dish. Malar stood nearby making string-hoppers, a dish somewhat akin to noodles. These happened to be Haran’s favorite foods. The telephone rang, startling Haran, so that he almost dropped his coconut. He reached over and grabbed the receiver. “Hello?”
“Hello Mama, this is Maithily. How is Auntie?”
“She’s fine. How about you?”
“Fine. Mama, have you gone to Kilinochchi to see mother, yet?”
“I went last week.”
“What did she say? Is she okay? Is she taking her medicine?” The questions came like firing pistons.

Monday 8 August 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி - நினைவுகள் பதிவுகள்



3. கேந்திர மையத்தில் யூனியன்
     
யூனியன் கல்லூரியின் புவியியல் அமைவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் யூனியன் அன்னை காந்தமையமாக ஆகர்சிக்கும் உன்னத பொலிவு பெற்றுள்ளாள். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை நெடுஞ்சாலையும், அச்சுவேலி - மூளாய் நெடுஞ் சாலையும் குறுக்கறுக்கும் சந்திப்பில் கல்லூரி உள்ளது. மாணவர்கள் பேரூந்தால் இறங்கி 50 மீற்றர்கூட நடக்கத் தேவையில்லை. அத்தோடு தெல்லிப்பழைப் புகையிரத நிலையம் 200 மீற்றருக்கு உட்பட்ட அமைவிலேயே உள்ளது. 20 மீற்றர் தொலைவில் தபாற் கந்தோர். சந்தியில் சகலவிதமான வர்த்தக நிலையங்களும் உள்ளன. பிரதேசச் செயலாளர் அலுவலகமும் சந்தி அருகே உள்ளது. அரசினர் ஆதார வைத்தியசாலை சுமார் 350 மீற்றர் தொலைவில் உள்ளது. இந்தப் புவியியல் அமைவு காரணமாகக் கல்லூரியை அண்டிய கிராம மாணவர்கள் மட்டுமல்லத் தொலைவில் இருந்து வரும் மாணவர்களும் யூனியன் கல்லூரியையே முதற் தெரிவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. புவியியல் அமைவு பெரிதும் வாய்க்கப் பெறாத - மகாஜனக் கல்லூரியையே முதற் தெரிவாக மேற்கொண்டனர். அது ஏன் என்ற விசாரணை என் மனதில் எழுந்து நின்றது.

Sunday 7 August 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (15)

இடையில் ஏன் இந்தச் சில எட்டப்பர்கள்!

வேலையிடத்தில் பல பகுதி பகுதிகள் உண்டு. ஒருமுறை நான் இன்னொரு பகுதிக்குச் சென்று அங்கே வேலை செய்ய வேண்டி வந்தது. அங்கு வேலை செய்யும் அஜி என்னும் சிங்கள நண்பருடன் கதைத்துவிட்டு எனது வேலையைத் தொடர்ந்தேன்.

சிலநிமிடங்களில் அங்கு வேலை செய்யும் இன்னொருவர் – அவரும் எமது நிறம் தான் – வந்து அஜி உடன் சிங்களத்தில் கதைத்தார். அவர் தமிழ் மக்களைப் பற்றி – குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்களைப்பற்றி – அவரிடம் முறைப்பாடு சொல்லிக் கொண்டிருந்தார். கேட்பதற்கு சகிக்கவில்லை.

Saturday 6 August 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (14)

யூ கே பாஸ் அவுற்

என்னடா இவன் தன்ரை கூட்டத்தையே தாழ்த்திப் பேசுகின்றான் என்று நீங்கள் நினைக்கக்கூடும். என்ன செய்வது உண்மைகள் சுடத்தான் செய்யும்.

இலங்கையில் வைத்தியர், பொறியியலாளர், கணக்காய்வாளர், பல் வைத்தியர், சட்டத்தரணி, மிருக வைத்தியர் என்ற நடப்பில்தான் படிப்பின் முக்கியத்துவம் இருக்கும். பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி கூட இந்த வகையில்தான் அமையும். அவுஸ்திரேலியாவில் பொறியியலாளர் எக்கவுண்டனின் கதி அந்தோ பரிதாபம். பல்கலைக்ககழகத்தில் படிப்பதற்கு இவை இரண்டிற்கும் 70 இற்கும் மேல் புள்ளிகள் இருந்தால் போதும். மேலே குறிப்பிட்ட ஏனையவற்றிற்கு 97 புள்ளிகளுக்கும்  மேல் தேவை.

இனி விஷயத்திற்கு வருகின்றேன். இலங்கையில் சீமெந்துத் தொழிற்சாலையில் நான் பொறியலாளராக வேலை பார்த்தபோது, அங்கே ஒரு யூ கே பாஸ் அவுற் இருந்தார். பலருக்கு அவரைக் கண்டால் நடுக்கம். அதற்கு அவரது அறிவாற்றலோ ஆங்கில அறிவோ காரணமல்ல. அவர் ஒரு வால்பிடி. அதற்கு யூ கே பாஸ் அவுற் என்ற அடைமொழி ஒரு தொங்கட்டான். ’யூ கே பாஸ் அவுற்’ ’யூ கே பாஸ் அவுற்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு மனேஜர்களுடன் கூடித் திரிவார்.


அதன் அர்த்தம், புலம்பெயர்ந்து இங்கே வந்தவுடன் தெரிகின்றது. 70 புள்ளிகள் போதுமானது.

Tuesday 2 August 2016

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016


அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

 போட்டிகள் பற்றிய பொது விதிகள்

Monday 1 August 2016

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சிறுகதை.

களம் ஒன்று : கதை இரண்டு

இரண்டாவது கதை : மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

                    
எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப - ஓவிய - கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து, சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

பொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் அவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையில் இருந்த அவளின் கண்கள் இமை மூடி இருந்தன. மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருந்தாள் அந்தப் பெண்.

வயது இருபதுக்கு மேல் இருக்கலாம் என மதிப்பீடு செய்து கொண்டார். அம்மன் கோவில் விக்கிரகம் மாதிரி அழகாக இருந்தாள். கிழவர் அந்தப் பெண்ணை, தனது பேரனுக்குப்  பொருத்தம் பார்த்துக் கொண்டார்.