Thursday 3 September 2015

ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் - குரு அரவிந்தன்


குரு அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர்.

புலத்திலுள்ள எழுத்தாளர்களில் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் மிகச் சிலர். அவர்களில் குரு அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ‘அணையாதீபம்என்ற சிறுகதையுடன் ஈழநாடு வாரமலரில் எழுத்துலகில் புகுந்த  இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் அகலவும் ஆழவும் வேரூன்றி தொடர்ந்தும் படைப்புகளைத் தந்தவண்ணம் உள்ளார். யுகமாயினி, கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டி மற்றும் பல சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்று குவித்தவர்.

இவரது படைப்புகள் பலராலும் பரவலாகப் படிக்கப்பட்டு, விரிந்த வாசகர் பரப்பைக் கொண்டுள்ளன. ‘விழுதல் என்பதுஎன்னும் பெரும் தொடரில் எம்முடன் இணைந்து எட்டாவது அத்தியாயத்தை எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் அம்மாவின் பிள்ளைகள்’, ‘தாயுமானவர்நாவல்கள் -சுமை, ‘அப்பாவின் கண்ணம்மாசிறுகதைகள் என்றும் எனது மனதில் நிழலாடுபவை. இவர் தனக்கென ஒரு எழுத்து நடையை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்தும் இலக்கியங்கள் படைத்து வருகின்றார்.

இந்நாளில் அறிவியல் சார்ந்த, தாம் பணிபுரியும் தொழில் சார்ந்த படைப்புகளை வெளிக் கொண்டுவரும் ஈழத்து எழுத்தாளர்கள் மிகக்குறைவு. இவரின் ஆனந்த விகடனில் வெளிவந்த நீர் மூழ்கி, நீரில் மூழ்கி என்ற நாவலுக்கு, தமிழகத்தின் ஐந்து பிரபல ஓவியர்கள் ஓவியம் வரைந்துள்ளார்கள். இது போன்ற அறிவியல் சார்ந்த படைப்புகளை இவ்வேளையில் இவரிடம் மேலும் எதிர்பார்க்கின்றேன்.

இவர் கனடாவின் ஒன்ராறியோ முதல்வர் விருதை இரு தடவைகளும் (2010, 2013), கனடா தமிழ்ர் தகவல் இலக்கிய விருதையும் (2012) பெற்றுள்ளார்.

இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும், சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படங்க்ளாகி உள்ளன.

இவரது சிறுகதைத் தொகுப்புக்கள் – இதுதான் பாசம் என்பதா?, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று


கதை வசனம் நெறியாழ்கை செய்த நாடகங்கள் – அன்னைக்கொரு வடிவம், மனசுக்குள் மனசு.

No comments:

Post a Comment