Friday 1 May 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-16)

புதுமை(புரட்சி)ப் புத்தகங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களை அந்தப் பெண் எழுத்தாளர் வெளியிட்டிருந்தார். சிறுவர் கதம்பம், சுடர், தமிழன் வேட்கை, கீர்த்தனை மாலை, சந்தகக்கவி என்ற புத்தகங்கள் அவை. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியையும் கூட. மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயம்தான். ஆனால் ஒரு குறை.

புத்தகம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? உள்ளே சரக்கு இருக்குதோ இல்லையோ அதற்கு ஒரு வடிவம் வரையறை இருக்க வேண்டும். 'மணி' அடித்தால் ஓசை வரவேண்டும் அல்லவா?
அத்தனை புத்தகங்களும் எங்கே எப்போ வெளியிடப்பட்டன? எத்தனை பக்கங்கள்? யாருக்கு உரிமை, விலை விபரம் ஒன்றுமே இல்லாமல் - அவை வரவேண்டிய அந்தப் பக்கங்கள் வெறுமையாக இருந்தன. அவை கட்டுரையா அல்லது சிறுகதையா அல்லது கவிதையா என எழுதியவருக்கே வெளிச்சம். அவசர உலகில் அவசர வெளியீடுகள். 'நூலும்' இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடலாமோ?

இவை -

நூலகர் திரு.என். செல்வராஜாவிற்கு பெரும் சவாலாகப் போகும் புத்தகங்கள்.

இலங்கையில் முதலாவது பதிப்பாக வந்த புத்தகங்களை, மீண்டும் இந்தியாவிலே பதிப்பித்து முதற்பதிப்பு என்று வெளியிடும் மணிமேகலைப் பிரசுர பதிப்பாளர்களுக்கு - எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மறுபதிப்புச் செய்ய உகந்தவை.

                                                                                                                                                                                                                                                               



No comments:

Post a Comment