Tuesday 17 March 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-15)



விசா இல்லாமல் போன பாம்பு

அவுஸ்திரேலியாவில் பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன. கோடை காலங்களில் வெப்பம் காரணமாக reserve  பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள குடிமனைகளிற்குள் இவை புகுந்து கொள்கின்றன. பாம்பை ஒருவர் கண்டுவிட்டால் அதை அடிப்பதோ கொல்வதோ இங்கு குற்றமாகும். அதற்கென கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு பாம்பு பிடிப்பவர்களை வரவழைக்க வேண்டும்.

'ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?' என்றெல்லாம் கேட்க முடியாது. அவர்கள் வந்து சேரும்போது பாம்புகள் தொலைதூரம் நகர்ந்திருக்கும். இருப்பினும் சளைக்காமல் சந்து பொந்துகளிலெல்லாம் தேடிப் பாம்பைப் பிடித்து விடுவார்கள் வீரர்கள். பிடித்த பாம்பை மீண்டும் கொண்டுபோய் எங்காவது காட்டிற்குள் விட்டு விடுவார்கள்.

ஆனால் ஒரு அதிசயம் - அவுஸ்திரேலியாவிற்கு அயல் நாடான நியூசிலாந்தில் பாம்புகள் மருந்திற்கும் இல்லை. ஒருமுறை அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த சரக்குக் கப்பல் (Cargo Ship) ஒன்றிலிருந்து பாம்பொன்று விசா இல்லாமல் நியூசிலாந்திற்குள் இறங்கி விட்டது. அவருக்கு அங்கே நண்பர்கள் இல்லாதபடியால் 'படம்' காட்ட முடியாமல் சுங்க அதிகாரிகளிடம் வகையாக மாட்டுப்பட்டுக் கொண்டது.. அந்தப் பாம்பினால் இரண்டு நாடுகளுக்குமிடையே பெரும் சண்டையே வந்துவிட்டது.







No comments:

Post a Comment