Monday 30 March 2015

நடை - கதை

குரும்பசிட்டியை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள்.

திரு! எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. நேற்றுக்கூட வானொலியில் திருவின் 'பழைய பானைக்குள் புதிய கள்ளு' என்ற இசையும் கதையும் ஒலிபரப்பாகியிருந்தது.

அவரைச் சந்திப்பதற்காகத்தான் அந்தக்கூட்டம் ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தது. காதல் சுவை சொட்டும் கள்ளு, சாந்தியைக் கவர்ந்திருந்தது. அவள் திருவின் படைப்புகளை ஆய்வு செய்து கலைத்துறையில் பட்டம் பெற இருக்கின்றாள். அவளை ஆய்வு செய்வதற்காக மற்றைய நால்வரும்.

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 23 - பகைவன் கோட்டைக்குள்

அன்ரி இன்றைக்கு யார் பற்றிய கதை?" தங்கன்.

இன்று ராச நாச்சியர் வம்சக் கடைக்குட்டி பாவலன்---மேஜர் அம்மான்---பற்றிய திகில் மிகு கதை. உலக முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய தாக்குதல். உலக வரலாற்றில் அதற்கு ஈடான பிரமிக்க வைக்கும் தாக்குதல் எங்கும் நடந்ததில்லை."

முல்லையின் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் மேஜர் அம்மான் பற்றிய கதைகள் எதுவும் வெளிவரவில்லை. அந்தத் தாக்குதலில் தங்கையைக் கண்டு, தன்னை மறந்து நின்ற அவன் மாண்டு போனான், அவன் மாழவில்லை. உயிருடன் உள்ளான், ராணுவஇரகசிய சிறையில் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

2001 ஆம் ஆண்டு, 'மேஜர் அம்மான்" என்று கேணல் சாள்ஸ் அழைத்த போது பாவலன் 'எல்லா ஒழுங்கும் செய்து விட்டேன்," என்று கூறிமீண்டும் களத்தில் தோன்றுகிறான்.

Wednesday 25 March 2015

நாய்ப்பிழைப்பு - கதை



றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான்.

கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் 'ஷொப்பிங் பாக்'கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில வேளைகளில் மூச்சு இரைத்தபடி நாய் அவனை முந்திச் செல்வதையும் காணலாம்.
"என்ன நாயொண்டு வாங்கியிருக்கிறாய் போல?" வேலை செய்யுமிடத்தில் றோமனைக் கேட்டேன்.

Monday 23 March 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 22 - பாசம்

'வேம்படியில் படித்துக்கொண்டிருந்த பொழுது யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். கண்ணீர் கொட்டியது. எரிந்து போன கட்டிடந்தான் எஞ்சி நின்றது.
நூலக வாசலில் சரஸ்வதி தேவியின் சிலை. வெக்கையின் கொடுமையில் உருக்குலைந்திருந்தது. எரித்தவன்களின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல ஆத்திரம்அலைமோதியது."
'யார் எரித்தது?" கோமதி.
இரண்டு சிங்க வாரிசு அமைச்சர்கள்.'சிங்கள நாய்கள். மிருக சாதி." எழுந்து நின்று வைதாள் சிந்துசா.
'சிந்துசா, எல்லாச் சிங்களவர்களும் அப்படியில்லை. போரின் பின்னர் நான் திருகோணமலையில் சந்தித்த கேணல் செனிவரத்தின மிக நல்ல சிங்களவர். அப்படியான தருமவான்கள் இன்னும் இருப்பர். அப்படி யானவர்கள் ஆட்சிக்கு வந்தால்...

பிள்ளைகளே, நான் கதைக்கு வருகிறேன்

இன்றைக்கு கரும்புலி முல்லையின் கதை. அவள் சொல்வாள்  எரித்த கதை.  எஞ்சிய கதையை தன் பாணியில் பதிவுசெய்வாள்."

Sunday 22 March 2015

இன்னொரு முகம் - சிறுகதை



முகம்: ஒன்று

பதட்டமான நாட்கள். எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். புகைப்படங்களை எடுத்துக் கொண்டு 'போட்டோ குறோம் கலர் லாப்'பை விட்டு வெளியேறும்போது நேரம் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. காலிவீதியில் ஒரே சன நெரிசலாக இருந்தது. தெருவைக் குறுக்காகக் கடந்து மறுபுறம் இருக்கும்  'பஸ் ஸ்ரொப்'பை நோக்கி நடப்பதில் அவதானமாக இருந்தேன்.

"சந்திரன்! சந்திரன்!!" எதிர்ப்புறமிருந்து யாரோ என்னைக் கூப்பிடுவது போலிருந்தது.

"அட சிவநாதன்! இவன் என்னண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தான்?"

Tuesday 17 March 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-15)



விசா இல்லாமல் போன பாம்பு

அவுஸ்திரேலியாவில் பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன. கோடை காலங்களில் வெப்பம் காரணமாக reserve  பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள குடிமனைகளிற்குள் இவை புகுந்து கொள்கின்றன. பாம்பை ஒருவர் கண்டுவிட்டால் அதை அடிப்பதோ கொல்வதோ இங்கு குற்றமாகும். அதற்கென கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு பாம்பு பிடிப்பவர்களை வரவழைக்க வேண்டும்.

Sunday 15 March 2015

அம்மா என்றொரு சொந்தம் - சிறுகதைத்தொகுப்பு

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திருமதி உஷா ஜவஹர். இலங்கையில் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். தற்போது சிட்னியில் இருக்கின்றார்.

'அம்மா என்றொரு சொந்தம்' இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 16 கதைகள் உள்ளன. இவற்றுள் ஒரு சிறுகதை வீரகேசரி பத்திரிகையிலும், இரண்டு 'உதயம்' பத்திரிகையிலும், ஏழு 'கலப்பை' சஞ்சிகையிலும் ஏனையவை ஸாம்பியா நாட்டில் வெளிவந்த 'செய்தி மடலிலும்' வெளிவந்தவை.

இத்தொகுப்பு ஒரு மணிமேகலைப் பிரசுரமாகும். இதற்கு குங்குமச்சிமிழின் பொறுப்பாசிரியர் கெளதம நீலாம்பரன் அணிந்துரை வழங்கியிருக்கின்றார். அவர் தமது அணிந்துரையில், "சிறுகதை இலக்கியம் தமிழில் அமரர் கு.ப.ரா.வின் 'குளத்தங்கரை அரசமரம்' முதலே தோன்றி, செழித்து வளர்ந்து வருவதாகக் கூறுவர்" என்று ஆரம்பிக்கின்றார். வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரத்தை கு.ப.ரா.தான்  எழுதினார் என்று எழுதியிருப்பது அவருக்கே 'சிறிது வெளிச்சம்'.

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 21 - செஞ்சட்டை போர்வையில்

பெரிய வாகனம் ஒன்று பாடசாலையின் எதிரே வீதியில் நின்றது. போட்டிக்கோவின் வாசலில் நின்று கவனித்தேன்.

சீமெந்தாலான மின்சாரக் கம்பம் ஒன்று இறக்கினர். லொறி சற்றுத் தூரம் நகர்ந்து தரிக்க இன்னொரு கம்பத்தை. இழுத்து  நிலத்தில் போட்டனர். லொறி தொடர்ந்து மின்சாரக் கம்பங்களை இறக்கியது.
மனதிலே மகிழ்ச்சி. தொலைக் காட்சி பார்க்க எனக்குக் கொள்ளை ஆசை. அந்த ஆசையை மரணமாக முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்ற பிறிதோர் ஆசை. கல்யாணம் சொர்க்கத்திலே எழுதியிருக்குது. மரணம் எங்கே எழுதியிருக்குது?மற்றவைக்குப் புரிந்திருந்தால் எழுதியிருப்பினம். எனக்கு புரியுது. எப்ப மரணம் என்று. நான் ஓரிடத்தில் எழுதி வைத்திருக்கிறேன்.

தங்கனும், சிந்துசாவும் கடதாசிச் சுருள்களில் வீரைப் பழம் கொண்டு வந்து கொடுத்தார்கள். சின்ன சின்ன உருண்டை சிவப்புப்பழங்கள். இலந்தைப் பழத்திலும் சிறியவை.

Tuesday 10 March 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-14)

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'

அவுஸ்திரேலியாவில் வெளிவந்த/ வெளிவந்துகொண்டிருக்கும்) தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள்

நான் அறிந்தவரையில் அவுஸ்திரேலியாவில் இரண்டு இலவச தமிழ்ப்பத்திரிகைகள் மெல்பேர்ணில் இருந்து வந்தன. ஒன்று 'ஈழமுரசு' - மாதம் இரண்டு தடவைகள் 1999ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் இதழின் மறுபதிப்பு. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பாக வெளிவரும் பத்திரிகை. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படும் வரை முழுக்க முழுக்க 'விடுதலைப்புலிகள் சம்பந்தமான செய்திகளே வந்து கொண்டிருந்தன. 2009ஆம் ஆண்டின் பிற்பாடு பல புதிய சங்கதிகளையும் சேர்த்து வெளிவருகின்றது. இருப்பினும் எல்லா விதமான பலதரப்பட்ட எழுத்துக்களையும் சேர்த்துக் கொண்டு வரும் ஒரு தரமான பத்திரிகையாக இன்னமும் தெரியவில்லை. இப்போது இதைக் காணவும் கிடைக்கவில்லை.

மற்றயது 'உதயம்'. மாதாந்தம் வெளிவரும் இருமொழிப் பத்திரிகை. இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளிவரும் புலி எதிர்ப்புப்பத்திரிகை என்று சொல்லுவார்கள். தமது எதிர்ப்புப்பிரச்சாரத்துடன் கலை இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து 1997ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன், இனிப்பிரச்சாரமும் தேவையில்லை, கலை இலக்கியமும் தேவையில்லை என்று முடங்கிவிட்டது. இலங்கை அரசு பணத்தை நிறுத்திவிட்டது என்று பேச்சு. சரியாக இருக்கலாம். ஏனென்றால், உண்மையில் போர் முடிவடைந்த பின்னர்தான் இத்தகைய பத்திரிகைகள் எமது இனத்திற்குத் தேவை.

Monday 9 March 2015

அழையா விருந்தாளிகள் - சிறுகதை


அனுஜா

வயது பதினெட்டு. சரியாகச் சொன்னால் பதினெட்டு வயதும் எட்டு மாதங்களும். அப்போ பதின்மூன்று வயது இருக்கும்.
               
வெட்டி முறிக்கும் சில நினைவுகள்.

தெரு முனையில் ஏதோ சத்தம் கேட்கும். அவிழ்த்துவிட்ட மாடுகளின் குளம்பு ஒலிகள் போல. துயில் கலையும் விடியல். விடிந்தும் விடியாததுமான புலரிப் பொழுதின் துலக்கம். தீப்பந்தாக சூரியன்.

இனி என்ன? பள்ளிக்கூடம் விடுதலை என்றால் விளையாட்டுத் தான்.ஒளித்துப் பிடித்து விளையாடுவோம். ஆத்துப் பரக்க நிலத்திலே கால்கள் புழுதிபடிய, பட்டும் படாதவாறு பாய்ந்து கொண்டு, செருப்பும் இல்லாமல். கெளசல்யா, பத்மநாதன், பிரதீபன், முரளிதரன். சிலவேளைகளில் பிரதீபனின் தம்பி தங்கையும் வருவார்கள். கெளசல்யா, பத்மநாதனின் சொந்தத் தங்கைச்சி. இவர்களில் முரளியின் வீட்டைத் தவிர எல்லாருடைய வீடுகளும் ஒரே ஒழுங்கைக்குள் இருந்தன. ஒரு வீட்டிற்குள் புகுந்தால் மற்ற வீடுகளுக்கும் போகலாம்.

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 20
பருப்புப் பார்த்த ஜவான்கள்

நான் பேசுவதை களுபண்டா தேவவாக்காய் எடுத்துக் கொள்பவர். எங்களுக்கிடையில் ஒப்பந்தம்.ஆறுமாதங்கள் முடிந்து வருகிற முதல் நல்லநாளில்தான் திருமணம். அதுவரை அழையாமல் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்கும்படி கூறியிருந்தேன்.
தெரிவிக்காமல் தளபாடங்கள் ஏன் அனுப்பினார்? கொஞ்சம் கண்டித்து வைக்கவேணும். சுசீலா அக்காவும், மணி அண்ணையும் களுபண்டாவின் உறவைத் துண்டிக்கத் துடிப்பது புரிகிறது.திருமணம் சொர்க்கத்தில் எழுதி முடிந்த கதை.

மணி அண்ணை மாட்டுத்தொழுவ வேலைகளைக் கவனிக்கிறார். ஏனைய சின்ன சின்ன வேலைகளையும் பார்க்கிறார். தடித்த சம்பளம். தன்னை ஓரங்கட்டுவதாகக் களுபண்டா எண்ணக்கூடும். சந்தேகம் கொள்ள வைப்பது அழகல்ல.

Monday 2 March 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 19
கரும் புலி

சுசீலாஅக்கா கேற்றைதிறந்துவருகிறார். இன்றைக்குப் பேசி முடிக்க வேண்டும். ஒத்திப்போடுவது நல்லதல்ல. சிங்களவன் ஆட்சியில் அடுத்த கணம் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

'சிவகாமி, எப்படிச் சுகம்?" என்று வினாவியபடி வரவேற்பு அறைக்குள் பிரவேசித்தார், சுசீலா அக்கா.
நல்ல சுகம், சுசீலா அக்கா. உங்கள் சுகம் எப்படி?"
'எல்லாம் உன் கையில் இருக்குது." சொல்லி விட்டுச் சிரித்தார்.
ஏன் சிவகாமி வரச்சொன்னவ? அப்படி என்ன முக்கிய அலுவல் என்று எண்ணியபடி மணிஅண்ணை வரவேற்பறைக்குள்  கால் பதித்தார். அவர் கையில் விரால் மீன். எப்பவும் குளத்தில் மீன்பிடிக்கப் போனால் தவறாமல் எனக்கும் தாறவர்.