Monday 29 December 2014

"சேர்ப்பிறைஸ் விசிட்"


நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் பேசும் தருணங்களாகவோ அல்லது இன்னும் ஏதாவது பூடகமான விஷயங்களாகவோ அவை அமையலாம். சில பொழுதுகளில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல முன் வந்து நிற்பார்கள்.

அப்படித்தான் ஒருநாள் இராசலிங்கமும் அவர் மனைவி சுலோசனாவும் திடீரென்று, நினையாப் பிரகாரமாக சிறீதரனின் வீட்டிற்கு  தரிசனம் கொடுத்தார்கள். சிறீதரனின் மனைவி பவானி முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்று அழுத்திச் சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து,

"அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்ரேண் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப் பதினைஞ்சு டொலர் பெற்றோலுமெல்லே செலவாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்... உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி.

வன்னி / அதிகாரம் 10 / கதிர் பாலசுந்தரம்


வீரத் தலைமுறை
அப்பாவுக்கு உள்@ரப் பிள்ளைகள் எல்லோரிலும் சிறிய சந்தேகம். ஒரு நாள். 'நான் றெடி" என்று சொன்ன தொனியிலேயே அவருக்குச் சந்தேகம். அப்படியிராது என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அரசியலில் ஊறிப் போன ராச நாச்சியார்வம்சம்.


சித்தப்பா குடும்ப பேரழிவின் இரண்டு தலை முறைகளுக்கு முன்னரே தாத்தாவையும், பெரிய தாத்தாவையும் தமிழர் விடுதலைப் போர்க்களத்தில் தியாகம் செய்த வம்சம்.

தாத்தா துரோணர் கதை: கொழும்பு கால்பேஸ் திடலில் நடந்த தமிழ் மொழி உரிமைக்காக தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தில்---1956---தாத்தா கலந்து கொண்டார். அன்று மாலை வெள்ள வத்தையில் சவோய் தியேட்டர் முன் நடந்து கொண்டிருந்தார். சத்தியாக் கிரகத்தின் வேளை அவரை உதைத்த ஒற்றைக்கண் சிங்களக் காடையன் கண்டு விட்டான். 'உவன் கால்பேஸ் திடலில் காலையில் சத்தியாக்கிரகம் செய்த பறத் தெமில,திராவிடயோ. அடித்துக் கொல்லுங்கள்" என்று கர்ச்சித்தான்.

Monday 22 December 2014

வன்னி - (அதிகாரம் 9) - கதிர் பாலசுந்தரம்

நான் செத்துப் போவன்

எங்கள் குடும்ப மாடுகள் மேய்ச்சல் முடிந்து வீதி வழியே  தொழுவம் திரும்புகின்றன.

எண்பது மாடுகளில் கால்வாசியைக் காணவில்லை. ஐந்து மாடுகள் போரின் வேளை பட்ட காயங்கள், அவய இழப்பால் உபாதையோடு நகர்கின்றன. மூன்று காலில் இரண்டு வளர்ந்த நாம்பன் கன்றுகள். எரு(த்)து மாடுகள் ஒன்றையும் காணவில்லை. இறைச்சிக்கு முடித்து போட்டார்கள். வேறுயார் இங்கே மாட்டிறைச்சி சாப்பிடுகிற மனுசர்? வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போனதும் உண்டு. கொழும்புப் பக்கமிருந்து பழைய இரும்பு தேடி வருகிறவர்கள் அந்த வியாபாரத்தோடு பக்கத் தொழிலாக மாட்டு வியாபாரமும் செய்கிறார்கள். முதலில்லாத கொழுத்த வியாபாரம்.

'சிவகாமி எப்படிச் சுகம்?" வினாவியபடி சுசீலா அக்கா கூடாரத்துள் நுழைந்தார்.
'வாங்க சுசீலா அக்கா. உதிலே இருங்கள். நிரம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறியள்."
'நேரம் இல்லை. பின் வளவு துப்பரவாக்கிறன். வளவுக்கை தோட்டம் செய்யப் போகிறன். நீர் இறைக்க பம் தந்திருக்கினம். மிளகாய் நடலாம் என்று யோசிக்கிறன்."

Sunday 21 December 2014

அந்நிய - உறவுகள்


 சிவநாதன் குடும்பத்தினர் இன்னும் மூண்றுமணி நேரத்தில் மெல்பர்ண் மாநகரில் கால் பதித்துவிடுவார்கள்.  அவர் மனம் 'எயர்போட்டில்' தனக்கு நடக்கப்போகும் வரவேற்பை எண்ணி மகிழ்கிறது. மகிழ்ச்சி வாய்வழியே வந்து இதழோரம் புன்முறுவல் பூத்து நிற்கின்றது. மனைவியும் பிள்ளைகளும் வரவேற்பில் திக்குமுக்காடித் திணறப்போகின்றார்கள். இருக்காதா பின்னே! சிவநாதனுக்கு மெல்பர்ணில் இரண்டு அண்ணன்மாரும் ஒரு தங்கையும் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்களின் அன்புத்தொல்லைக்கு அணை போட முடியாதல்லவா? 'என் வீட்டில் நில்; உன் வீட்டில் நில்' என்று  போட்டி போட்டுக் கொண்டு இவர்களின் காலைக் கையைப் பிடிச்சுக் கெஞ்சப் போகின்றார்கள்.

'எயர் நியூசிலாண்ட்' தனது சில்லுகளை உரசி 'ரன்வேயிலிருந்து' மேலெழும்புகிறது. சிவநாதன் இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு வந்தபோது 'எயர்போட்டில்' நடந்த கலாட்டாவை நினைத்துப் பார்த்தார். வாய்விட்டே சிரித்துவிட்டார்.

Monday 15 December 2014

வன்னி - (அதிகாரம் 8) - கதிர் பாலசுந்தரம்

பட்ட காலிலே படும்
காலையில் பாடசாலைத் திறப்பு விழா. பிரதம விருந்தினர் கேணல் ரணவீர, மனையாளுடன் வந்தவர். சிவில் உடை. நீல கோட் சூட். மனைவி அநுலா கண்டியன் பாணியில் அரையைச் சுற்றி அகன்ற கொய்யகம் வைத்த நீலச் சேலை. கழுத்து முன்பக்கம் பின்பக்கம் இரண்டும் ஓவென்று ஆழவெட்டிய வெள்ளைச் சட்டை. சிங்கள மங்கையர்களுக்கு அப்படிச் சட்டை போட்டுக் காட்டுவதிலே அலாதி பிரியம். நோநாலேசான கறுப்பு. மெல்லிய மஞ்சள் சின்னப் பற்கள்.பென்னாம் பெரிய கொண்டை. அந்த வட்ட முகத்திலே ஏதோ அள்ளிப்பூசி யிருந்தது. யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் விளங்கயில்லை.

நச்சுப் புடையன் கேணல் ரணவீரவின் மெய்ப்பாதுகாப்பு ராணுவத்தினர். சீருடையில். இருபது பேர் வரையிருக்கும். சற்று எட்ட நின்றார்கள்.

Monday 8 December 2014

வன்னி -(அதிகாரம் 7) - கதிர் பாலசுந்தரம்

சுனாமி கருக்கட்டுகிறது

காலை பத்து மணி. வீதியில் என்ன வித்தியாசமான மனித நடமாட்டம்? கூடாரத்து வாசலில் நின்றபடி அவதானித்தேன்.

வளவு வாயிலில் இரண்டு புதிய வாகனங்கள். கொழும்பு மாநகர இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக வாகனம். வெள்ளை வண்ணம். இன்னும் கறுப்பு ஒன்று. ஐவர் வாகனங்களால் இறங்கி என் வளவுக்குள் கால் வைத்தனர்.
கண்கவரும் மேலை நாட்டு உடைகள். கறுப்பு சப்பாத்துக் கால்களை வேமாகத் தூக்கி வைத்து விரைந்து உள்ளே வந்தனர். ஏதோ அவசர காரியத்துக்குப் போகிறவர்களைப் போல முகங்கள் உசார் நிலையில் காட்சி தந்தன.

கூடாரத்துக்கு மேற்கே புதிதாக எழுந்து கொண்டிருக்கும் வீட்டுப் பக்கம் போனார்கள். அத்திபாரத்தைப் பார்த்தனர். ஒருவர் ஏதோ குறிப்புகள் எழுதினார்.

Sunday 7 December 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (-8)

வீணாகப் போகும் மருந்துகள்

ஒருமுறை எனது குடும்ப வைத்தியர் Prednisolone என்ற மருந்தை எழுதித் தந்துவிட்டு அதை எப்படிப்பாவிப்பது என்று ஒரு சூத்திரத்தையும் போட்டுத் தந்தார். முதல் 3 நாட்களும் ஒவ்வொருநாளும் 3 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொருநாளும் 2 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொருநாளும் 1 குளிசை வீதமும், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொருநாளும் பாதிக்குளிசை வீதமும் எடுக்க வேண்டும். அந்த மருத்தின் பக்கவிளைவுகள் பற்றியும் திகிலூட்டினார். எப்படித்தான் கூட்டினாலும் மொத்தம் 16 குளிசைகள்தான் எனக்குத் தேவைப்படும். பார்மஷியில் 60 குளிசைகள் கொண்ட மருந்துப்போத்தல்தான் இருந்தது. மிகுதியை என்ன செய்வது? வைத்திருந்து மீண்டும் தேவைப்படும்போது பாவியுங்கள் என்றார் அங்கிருந்த பாமஷிஸ்ற். போத்தலில் முடிவு திகதி (expiry date) ஒரு வருடம் என்றிருந்தது. பிறகு எனக்கு அது தேவப்படவில்லை. expiry date வரும் வரையும் வைத்திருந்துவிட்டு எறிந்துவிட்டேன். மருந்துகளின் விலை இப்போது எக்கச்சக்கம். என்ன செய்வது? தேவைப்படும் அளவுக்கு மருந்து வாங்கமுடியாததால் மருந்தும் காசும் வீண் விரயமாகின்றன.

கங்காருப் பாய்ச்சல்கள் (-7)

நீர் சேமிப்பு

மனிதர் வாழும் கண்டங்களில் மிகவும் வரண்டது அவுஸ்திரேலியா. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது. அதனால் நீர்க்கட்டுப்பாடும் அமுலில் உள்ளது.

ஒருமுறை வீட்டிலிருந்த ஒவ்வொரு தண்ணீர்ப் பைப்பிற்குக் கீழும் ஒவ்வொரு பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாடசாலையில் மகனுக்கு ஒரு புரயெக்ற் (project) கொடுத்திருந்தார்கள். வீணாகப் போகும் தண்ணீரின் அளவை மில்லி லீற்றரில் அளவிடும் முறை அது.

மறுநாள் காலை

Wednesday 3 December 2014

டோர்ச் லைட் - சிறுகதை

 
தெல்லிப்பழை
1983,12-01

அன்புமிக்க மகன் விநோ அறிவது,

நாங்கள் அனைவரும் நற்சேமமாகவுள்ளோம். அதுபோல் நீயும் சேமமாகவிருக்க விநாயகர் அருளை வேண்டியிருக்கிறேன்.

மேலும் நீ ஒரு 'ரோச்லைற்' வாங்கப் போவதாகவும், இருளிற்குள் செல்லப் பயமாகவிருக்கிறதென்றும்  கடிதத்தில் எழுதியிருந்தாய். அப்படி இருளில் எங்குதான் போகின்றாய்?

தந்தையின் வழியில் - சிறுகதை



அது ஒரு காலைப் பொழுது. வெறுமை என்னும் சுமையைச் சுமக்க மாட்டாமல் குஞ்சு நடந்து கொண்டிருந்தாள். நடை என்னும் பதத்திற்கு அர்த்தத்தைக் கற்பிக் காமல் இயங்க மறுத்த கால்கள் முன்னும் பின்னும் கோணி நெளிந்தன.

                காலை இரை குஞ்சுவிற்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவள் வயிறு வெறுமை அடைந்திருக்காது. இப்பொழுது ஒரே பசி!

இனி ஒரு விதி செய்வோம்! - சிறுகதை



              













 ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
  கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
  கோடி என்றால் அது பெரிதாமோ?’
-              பாரதியார்

அவர்கள் சூனிய வெளியையே நித்தமும் தரிசனம் செய்பவர்கள். நாளைய பொழுதை ஒருபோதுமே நினைத்துப் பார்க்காதவர்கள். இருட்டு உலகிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் மனம் - உறுதி கொண்டது, தெளிவானது, சலனமற்றது, ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கியது.

Monday 1 December 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 6) - கதிர் பாலசுந்தரம்

மிருகங்கள்

கூடார வாசலில் நிற்கத் தெரிகிறது. உயர்ந்து வளர்ந்த வெள்ளைக்காரன் ஒருவனும் தெரிகிறான். இரண்டு மூன்று புதிய வாகனங்கள் பாடசாலை வாயிலில். பெரிய உத்தி யோகத்தர்கள் போலவிருக்கிறது. கொடுத்த நன்கொடைக்கு வேலை நடக்குதோ என்று கணக்குப் பார்க்க வந்திருக்கிறார், கொழும்பு ஜேர்மன் அரசதூதுவர்.

பாடசாலைக் கட்டிடச் சுவர்கள் பூரணமாக எழுந்து நிற்கின்றன. டானா வடிவில். யன்னல் கதவு வைக்கும் இடைவெளிகள் தெரிகின்றன. வகுப்பறைகள், அலுவலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், அதிபர் விடுதி. பொலிவாக அழகாக இருக்கப் போகிறது.